தமிழ்தேசிய சைவ மக்கள் கட்சியின் மத்திய குழுக் கூட்டம்
தமிழ்தேசிய சைவ மக்கள் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று 30-08-2020 மன்னார் இடம்பெற்றது இதன்போது இதன்போது கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக அலசி ஆராயப்பட்டது தொடர்ந்து யாழ்ப்பாணத்திலிருந்து வருகை தந்த தொண்டர்களின் வேண்டுகோள்களுக்கு இணங்க எதிர்வரும் கிழமைகளில் தமிழ்தேசிய சைவ மக்கள் கட்சியின் யாழ்ப்பாண கிளையினை அங்குராப்பணம் செய்வது என முடிவெடுக்கப்பட்டது
மேலும் கட்சியின் தொண்டர்கள் ஆனால் எதிர்காலத்தில் வரவிருக்கும் தேர்தல் தொடர்பான கட்சியின் நிலைப்பாட்டினை கேட்டபொழுது அதற்கான பதிலை தலைவர் கூறுகையில் எதிர்காலத்தில் வரவிருக்கும் தேர்தலை சந்திப்பதில் எந்த விதமான ஐயப்பாடுகள் இல்லை எனவும் இன்று முதல் அதற்கான ஏற்பாடுகளை திட்டமிட்டு செயல்படுத்துமாறு மத்திய குழுவுக்கு பணிக்கப்பட்டது
தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தமிழ் தேசிய சைவ மக்கள் கட்சியானது தேர்தல் காலங்களில் வாக்காளர்களுக்கு பணத்தினையோ மதுபானங்களையோ உணவுப் பொருட்களையோ வழங்கி மக்களின் ஜனநாயக உரிமைகளை மிதித்து தேர்தலில் வெற்றி பெற மாட்டாது என்பதையும் இறுக்கமாக தெரிவித்தார்

No comments:
Post a Comment