தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா தொற்று........
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 5 ஆயிரத்து 890 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் 120 பேர் உயிரிழந்தனர்.
இதில் தமிழகத்தில் மட்டும் 5,870 பேருக்கும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து வந்த 20 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார துறை அறிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்தம் எண்ணிக்கை 3 இலட்சத்து 43 ஆயிரத்து 945 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கடந்த வாரங்களில் ஆயிரத்துக்கும் குறைவாக பாதிப்பு பதிவான நிலையில் இன்று ஆயிரத்து 185 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தவர்களில் 120 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து மொத்த இறப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்து 886 ஆக உயர்ந்துள்ளது.
அதே வேளை இன்று மட்டும் 5,667 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும் இதுவரை மொத்தம் 2 இலட்சத்து 83 ஆயிரத்து 937 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் சுகாதார துறை அறிவித்துள்ளது.

No comments:
Post a Comment