கொரோனா அச்சத்தால் கணவனுக்கு ஏற்பட்ட நிலைமை... வீட்டின் கேட்டை உடைத்த பகுதி மக்கள்....
மதுரையை பூர்வீகமாக கொண்ட பாஸ்கரன் என்பவர் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். அவர் அங்கிருந்து பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு தனது வீடு அமைந்துள்ள கேரள மாநிலம் வெள்ளிமலைக்கு சென்றுள்ளார். மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து வீட்டின் கதவை திறக்க கூறியுள்ளார் பாஸ்கரன்.
பாஸ்கரனுக்கு கொரோனா இருக்குமோ என்ற அச்சத்தால், அவர்கள் வீட்டை விட்டு வெளியே வராமலும், கதவை திறக்காமலும் இருந்துள்ளனர். தனக்கு எந்த பாதிப்பும் இல்லை என பாஸ்கரன் விளக்கம் அளித்தும், அவர்கள் கதவை திறக்கவில்லை. இதனால் பலமணி நேரம் வீட்டு வாசலிலேயே காத்துக்கிடந்தார் பாஸ்கரன்.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் பாஸ்கரனின் மனைவியிடம் தொலைபேசியில் அழைத்து, அவரை வீட்டிற்குள் விடுமாறு வலியுறுத்தியுள்ளனர். ஆனால், கொரோனா காலம் என்பதால்
அவரை அனுமதிக்க முடியாது என மறுத்துள்ளார் அவரது மனைவி .
பின்னர் பாஸ்கரன், வீட்டிற்குள் இருக்கும் காரை கொடுத்தால், அதன் மூலம் தனது சொந்த ஊரான மதுரைக்கு சென்றுவிடுகிறேன் என கெஞ்சியுள்ளார். அதற்கும் அவரது மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் வேறு வழியின்றி இறுதியில் அப்பகுதி மக்களின் முயற்சியால் வீட்டின் கேட்டை உடைத்து காரை எடுத்துக்கொண்டு மதுரைக்கு சென்றுள்ளார்
பாஸ்கரன்.
Reviewed by Author
on
August 18, 2020
Rating:


No comments:
Post a Comment