மண்சரிவில் சிக்கி 10 பேர் பரிதாபகரமாக மரணமடைந்துள்ளனர்..
கேரளா- இடுக்கி, ராஜமாலா பகுதியில் தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த நிலச்சரிவில் சிக்கியிருந்த 16பேர் மீட்கப்பட்ட நிலையில் காணாமல் போயுள்ள 52 பேரை தேடும் பணியில் மீட்பு பணியினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் மீட்கப்பட்ட 16பேரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.இதனால் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது..
குறித்த நிலச்சரிவில் 5 சமூக இல்லங்கள் சிக்கியுள்ளதாகவும் இதில் சுமார் 85 பேர் வசித்து வந்துள்ளதாகவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது...

No comments:
Post a Comment