லெபனான் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 154 ஆக அதிகரிப்பு..
உலகையே உலுக்கிய பெயிரூட் வெடிப்பு சம்பவத்தினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 154ஆக அதிகரித்துள்ளது. மேலும், 6,000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்...
நான்கு நாட்களுக்குப் பிறகும் காணாமல் போனவர்களுக்கான தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து வருவதால், இதன் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது...
இதுகுறித்து சுகாதார அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், “இறந்தவர்களின் எண்ணிக்கை 154 ஆகும். இதில் 25 பேர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. 60க்கும் மேற்பட்டவர்களை இன்னும் காணவில்லை. செவ்வாய்க்கிழமை காயமடைந்த 5,000 பேரில் குறைந்தது 120பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்” எனக் கூறினார்.
லெபனான் தலைநகர் பெயிரூட்டில் செவ்வாய் கிழமை, 2,750 டன் அம்மோனியம் நைட்ரேட் வெடித்து சிதறியதில், 200,000 முதல் 250,000பேர் வரை வீடுகளை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது...

No comments:
Post a Comment