பொதுஜென பெரமுன வேட்பாளருக்கு மக்கள் திரண்டு ஆதரவு
2020 ஆண்டு பாராளுமன்ற பொது தேர்தலில்
வன்னி தேர்தல் தொகுதியில் பொதுஜன பெரமுன கட்சி சர்பாக போட்டியிடுகின்ற
கேணல் ரத்னபிரிய பந்துவின் மன்னார் மாவட்ட தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று
காலை 11 மணியளவில் மன்னார் மாவட்டத்தில் உள்ள தனியார் விருந்தினர்
விடுதியில் இடம் பெற்றது
இதன்
போது நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு கேணல் ரத்னபிரிய பந்து
அவர்களுக்கும் சிறிலங்க பொதுஜென பெரமுன கட்சிக்கும் தங்களுடைய ஆதரவை
தெரிவித்தனர்
குறித்த
பிரச்சர கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய கேணல் ரத்ன பிரிய பந்து
தொடர்சியாக வன்னி மக்களின் பிரச்சினைகள் தீர்க்கபடாமல் உள்ளது வன்னி மக்கள்
தொடர்ந்து தாங்கள் தெரிவு செய்யும் வேட்பாளர்களை எதிர் கட்சியின்
ஆசங்களுக்கே அனுப்பி வைக்கின்றனர்
அதனாலே
தெற்கில் இருக்கும் அபிவிருத்தியோ முன்னேற்றமோ வேலைவாய்ப்போ வடக்கில்
இல்லை இன்னிலை மாற வேண்டும் எதிர் கட்சிக்கு எவ்வாறு பாராளுமன்ற
உறுப்பினர்களை அனுப்பி வைக்கின்றோமோ அதே போன்று அரசுடன் இணைந்து
அபிவிருத்தியை மேற்கொள்ளும் சிறந்த ஒரு நபரை ஆளும் கட்சி சார்பாகவும்
அனுப்பி வைக்க வேண்டும் எனவே இம்முறை எனக்கு தமிழ் மக்களாகிய நீங்கள்
வாக்களித்தால் தமிழ் மக்களின் 100 வீதமான பிரச்சினைகளை என்னால் தீர்க
முடியாவிட்டாலும் அரசாங்கத்துடன் இனைந்து அபிவிருத்தி ரீதியான பிரசைனைகள்
மாத்திரம் இன்றி அரசியல் கைதிகளுடைய பிரச்சினைகளாக இருக்கலாம் இந்திய
மீனவர்களுடைய வருகை தொடர்பான பிரச்சினைகளாக இருக்கலாம் அனைத்தையும்
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவுடன் இணைந்து தீர்பதற்கான நடவடிக்கைகளை
மேற்கொண்டு தருவதாக தெரிவித்தார்..
பொதுஜென பெரமுன வேட்பாளருக்கு மக்கள் திரண்டு ஆதரவு
Reviewed by Author
on
August 01, 2020
Rating:

No comments:
Post a Comment