ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடனேயே அரசாங்கம் அமைக்கப்படும்..
தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடனேயே அரசாங்கம்
அமைக்கப்படவுள்ளது. இதற்கான பாரிய முன்னகர்வுகள் தென்னிலங்கையில்
மும்முரமாக மேற்கொள்ளப்படுகிறது இந்த வகையில் வன்னி மக்கள் ஐக்கிய தேசிய
கட்சிக்கு ஒரு பிரதிநிதித்துவத்தையேனும் பெற்றுத் தரவேண்டியது காலத்தின்
கட்டாயமாகும் என ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் ஏ சமியூ முகம்மது பஸ்மி
தெரிவித்தார்.
மன்னார் கீரியில் இன்று (1)
சனிக்கிழமை காலை இடம் பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல்
பிரசாரக்கூட்டத்தில் உறையாற்றும் பொழுதே ஏ.சமியூ முகம்மது பஸ்மி
மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது,
கடந்த ஐனாதிபதி தேர்தலில் ஆளும் தரப்பிற்க்கு வாக்களித்த தென்னிலங்கை மக்கள் தற்போது மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
தாம் தவறு செய்துவிட்டதாக உணரத்தொடங்கிவிட்டனர்.ஜனாதிபதி த் தேர்தலில் அவர்களுக்கு இருந்த மனநிலை தற்போது முற்றாக மாறிவிட்டது.
அத்துடன் அவர்கள் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்கும் நிலைமை தோன்றியுள்ளது.
தென்னிலங்கையில்
ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடனேயே புதிய அரசாங்கம்
அமைக்கப்படவுள்ளது.மேலும் ஐக்கிய தேசிய கட்சி தற்போது புதிய உத்வேகம்
பெற்றுள்ளது.
எமது கட்சி தலைமையில்
முன்னெடுக்கப்பட்ட கடந்த நல்லாட்சி எனும் பஸ் வண்டியில் ஏறி
அழிச்சாட்டியமும் அடாவடித்தனமும் செய்தவர்கள் தற்போது எம்மில் இருந்து
வெளியேறிவிட்டனர்.
ஐக்கிய தேசிய கட்சி தற்பொழுது
தூய்மையடைந்துள்ளது.எமது நல்லாட்சியில் அங்கம் வகித்து அரசிற்கும் தேச
மக்களுக்கும் பெரும் குந்தகம் விளைவித்தவர்கள் எல்லாம் எம்மிலிருந்து
விரட்டி அடிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் வெளியேற்றத்தினால் வன்னியில் ஐக்கிய தேசிய கட்சியை நோக்கி ஆதரவாளர்கள் திரண்டு வருகின்றனர்.
மேலும்
இத்தேர்தலின் பின் ஐக்கிய தேசிய கட்சி இணைந்த அரசு அமைக்கப்படும்.இந்
நிலையில் எமது கட்சி சார்பில் வன்னியிலிருந்து பாராளுமன்றத்திற்கு ஒருவர்
தெரிவாகினால் அதனால் கிடைக்கும் வரப்பிரசாதங்களை மக்களாகிய நீங்கள் சற்று
எண்ணிப்பார்க்க வேண்டும்.
எமது கட்சியின் தலைவர் ரணில் மற்றும் செயலாளர் அகிலவிராஜ் காரியவாசம் ஆகியோர்களுடன் நான் கடந்த வாரம் உரையாற்றினேன்.
அப்பொழுது
வன்னியில் எமது கட்சிக்கு எம்.பி ஒருவர் தெரிவாகும் பட்சத்தில் அவருக்கு
வன்னி மாவட்டம் தொடர்பில் பல முக்கிய தீர்மானம் மேற்கொள்ளும் அதிகாரத்தை
வழங்குவதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர்.
அத்துடன்
யுத்தத்தில் கணவனை இழந்த குடும்பங்களுக்கும் பெண் தலைமைத்துவக்
குடும்பங்களுக்கும் அங்கவீனம் அடைந்தவர்கள் மற்றும் போரில்
காயமடைந்தவர்களுக்கும் நிலையான வாழ்வாதாரத்தை வழங்கும் வகையில் அவர்கள்
இலகுவாக வருமானம் பெருவதற்கு ஏதுவாக சுயதொழில் ஒன்றை ஆரம்பிப்பதற்கு
குடும்பமொன்றுக்கு சுமார் இரண்டு லட்சம் ரூபாவினை மானியமாக வழங்க நடவடிக்கை
எடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனை
நடைமுறைபடுத்துவதாயின் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் மற்றும்
யுத்தப்பாதிப்பிற்குள்ளனவர்கள் அனைவரும் ஐக்கிய தேசிய கட்சிக்கு
வாக்களிக்கவேண்டும்.
மேலும் கடந்த
நல்லாட்சியியில் வழங்கப்பட்டு தற்போதைய அரசினால் இடைநிறுத்தப்பட்ட
ஏழாயித்திற்கும் அதிகமான கருத்திட்ட உதவியாளர் நியமனங்கள் சிறைச்சாலை
உத்தியோகத்தர் நியமனங்கள் உட்பட நிறுத்தப்பட்ட நியமனங்கள் அனைத்தையும் உடன்
வழங்குவதற்கு துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளபடும் எனவும் எமது தலைவர் ரணில்
தெரிவிக்கிறார்.
இந்த வகையில் ஐக்கிய தேசிய
கட்சி போன்ற மாபெரும் அமைப்பிற்கு இம்முறை வன்னி மக்களாகிய நீங்கள்
அனைவரும் வாக்களித்து வன்னியில் சுமார் 20வருடங்களாக இல்லாதிருந்த ஐ.தே.க
பாராளுமன்றப் பிரதிநிதிவத்தைப் பெற்றுத் தரவேண்டும்.இம்முறை வன்னியைச்
சேர்ந்த படித்த இளைஞர் யுவதிகள் அநேகர் ஐக்கிய தேசிய கட்சிக்கு
வாக்களிக்கவுள்ளனர்.
மேலும் சுமார் 20 வருடங்களாக
வன்னியில் தெரிவானவர்கள் முகவரி, உரிமை, விடுதலை எனப் பேசி பேசி மக்களை
ஏமாற்றுகின்றனர். இவர்கள் எவரும் வன்னியைச் சேர்ந்த வரிய மக்களின்
பொருளாதாரத்தை உயர்த்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை
என்பதனை தற்போது மக்கள் நன்கு உணர்ந்துள்னர் எனவும் பஸ்மி தனதுரையில்
மேலும் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஆதரவுடனேயே அரசாங்கம் அமைக்கப்படும்..
Reviewed by Author
on
August 01, 2020
Rating:

No comments:
Post a Comment