ஜீவன் தொண்டமானின் நிரந்தர வீடு நடவடிக்கை...............
லிந்துலை, பம்பரகலை நடுப்பிரிவு தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்காலிக இருப்பிடங்களை அமைப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிரந்தர வீடுகளை அமைப்பதற்கும் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இராஜாங்க அமைச்சராக பதவியேற்ற கையோடு கண்டியிலிருந்து நுவரெலியாவுக்கு திரும்பிய ஜீவன் தொண்டமான், முதலில் தீயினால் பாதிக்கப்பட்ட லிந்துலை பம்பரகலை நடுப்பிரிவு தோட்டத்துக்கு
விஜயம் மேற்கொண்டார்.
அங்கு தீ விபத்தால் பாதிக்கப்பட்டுள்ள 24 குடும்பங்களைச் சேர்ந்த உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல்கூறிய ஜீவன் தொண்டமான், தற்காலிகமாக தங்குமிட வசதிகளையும், அவர்களுக்கான உலர்
உணவுகளையும் வழங்க பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் ஊடாகவும், அக்கரப்பத்தனை பிரதேச சபையின் ஊடாகவும் ஏற்பாடு செய்தது மட்டுமல்லாது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வீடுகள் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது...
Reviewed by Author
on
August 13, 2020
Rating:


No comments:
Post a Comment