மன்னாரில் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் வட பிராந்திய முகாமையாளர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது
2 ஆம் இணைப்பு)-
மன்னாரில் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் அரச போக்குவரத்து சேவையின் வட பிராந்திய முகாமையாளர் அதிரடியாக கைது.
(மன்னார் நிருபர்)
19.08.2020
இலங்கை போக்குவரத்து சேவையின் வட பிராந்திய முகாமையாளர் மன்னாரில் வைத்து ஒருவரிடம் இலஞ்சம் பெற்ற நிலையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் இன்றைய தினம் புதன் கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் போக்குவரத்து சாலையின் பின் பகுதியில் வைத்து இலஞ்சம் பெற்ற போது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகை...
இலங்கை அரச போக்கு வரத்து சேவையின் வட பிராந்திய முகாமையாளர் நபர் ஒருவரிடம் முறைப்பாடு ஒன்றை சீர் செய்வதற்கு என 60 ஆயிரம் ரூபாய் பணத்தை இலஞ்சமாக பெற்ற நிலையில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இலங்கை போக்குவரத்து சேவையின் வட பிராந்திய முகாமையாளர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
விசாரணைகளின் பின் குறித்த நபர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
——
1ம் இணைப்பு
இலங்கை அரச போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளர் மன்னாரில் வைத்து இலஞ்சம் வாங்கிய நிலையில் இலஞ்ச ஊழல்
ஆணைக்குழு அதிகாரிகள் இன்று புதன்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
முறைப்பாடு
ஒன்றை சீர்செய்யும் வகையில் மன்னாரில் வைத்து பணம் பெற்றுக் கொள்ளும்
சந்தர்ப்பத்தில் இலஞ்சம் வாங்கி குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு
அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்
தற்போது
கைது செய்யப்பட்ட வட பிராந்திய முகாமையாளர் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு
அழைத்து வரப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை
குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் இலங்கை அரச போக்குவரத்துச் சேவையின் வட பிராந்திய முகாமையாளர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது
Reviewed by Author
on
August 19, 2020
Rating:

No comments:
Post a Comment