லிற்ரோ கேஸ் லங்கா லிமிடட்டின் நிறுவனத்தின் புதிய சேவை.. வீட்டிற்கே விநியோகம் செய்ய மொபைல் செயலி......
இலங்கையின் பாரிய திரவ பெற்றௌலிய எரிவாயு இறக்குமதியாளரும்
விநியோகஸ்தரும் சந்தையின் முன்னணி நிறுவனமுமான லிற்ரோ கேஸ் லங்கா லிமிடட் அவர்களது வீட்டு விநியோக மொபைல் செயலியை நிறுவனத்தின் தலைமையகத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில் அறிமுகப்படுத்தியது. இந்த மொபைல் செயலியானது நாடு முழுவதும் பரந்துள்ள விநியோகஸ்தர் வலையமைப்பின் ஊடாக வாடிக்கையாளர்களுக்கு விரைவாகவூம் வசதியாகவும் லிற்ரோ எரிவாயுவை வீட்டு வாசலுக்கே விநியோகிக்க உதவுகின்றது.
இந்த வீட்டு விநியோக செயலியானது பாவனையாளர்கள் இலகுவாக
பயன்படுத்தக்கூடிய இடைமுகத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன் ஓடரை
மேற்கொள்ளும் செயன்முறையை நெறிப்படுத்துவதையும் எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த செயலியானது வாடிக்கையாளர்கள் தமக்கு விருப்பமான ஒரு சேவையை/தயாரிப்பை எளிய படிமுறைகளில் தெரிவுசெய்து தமது வீட்டு வாசலுக்கே பெற்றுக்கொள்ள வழி செய்கிறது. இது தற்போது பாவனையில் உள்ள ‘அழைப்பை’ மேற்கொள்ளும் தெரிவை விட மிகவும் வினைத்திறனான மற்றும் புத்தாக்கமான தெரிவாகும்.
மொபைல் சாதனங்கள், டெஸ்க்டொப் /மடிகனணிகள் போன்றவற்றில் செயற்படும் வகையில் இந்த செயலியானது உருவாக்கப்பட்டுள்ளது. இதனைநிர்வகிக்கும் பொருட்டு வாடிக்கையாளர்கள் சேவை நிலையமொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன் அவை அனைத்து ஓடர்களையும் ஒரே இடத்தில் செயன்முறைக்குட்படுத்தி ஓடர்களை அதற்குரிய எரிவாயூ முகவருக்கு அனுப்பி வைப்பர். இது எல்லா நேரங்களிலும் விநியோக செயன்முறையை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் லிற்ரோ கேஸுக்கு உதவுகின்றது.

No comments:
Post a Comment