அண்மைய செய்திகள்

recent
-

66 வாக்குகளால் தனது தேசியப்பட்டியலை இழந்தது பிள்ளையையானின் TMVP கட்சி.....

 தேசிய ரீதியில் 67766, 67758 வாக்குகளை மாத்திரம் பெற்ற அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ரத்ன தேரரின் OPPP கட்சிகள் இலங்கை வரலாற்றில் மிகக்குறைந்த வாக்குகளுடன் தலா ஒரு தேசிய பட்டியல் பாராளுமன்ற பிரதிதுவத்தை பெற்றுக்கொண்டுள்ளன.

. 445,958 வாக்குகளை பெற்ற தேசிய மக்கள் சக்தி(JJB) இற்கும் ஒரே ஒரு தேசிய பட்டியல்தான்.
 பொதுஜன பெரமுனவுக்கு 17 தேசிய பட்டியல் ஆசனங்கள்
எவ்வாறு?
தேசிய ரீதியில் அளிக்கப்பட்டு செல்லுபடியான மொத்த வாக்குகள் - 11,598,929
மொத்த தேசிய பட்டியல் ஆசனங்கள் -29
ஒரு தேசிய பட்டியல் ஆசனத்திற்கு தேசிய ரீதியில் பெற வேண்டிய மொத்த வாக்குகள் 11,598,929 / 29 = 399, 963
 
முதல் சுற்று
#SLPP பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகள் - 6,853,690 
 முதல் சுற்றில் பெற்று கொண்ட ஆசனங்கள் - 17 (17 X 399,963 = 6,799,371) 
மீதி 6,853,690 -6,799,371 = 54,319
 
#SJB பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகள் - 2,771,984 
முதல் சுற்றில் பெற்று கொண்ட ஆசனங்கள் - 7 (7 X 399,963 = 2,757,741)
 மீதி 2,771,984 - 2,757,741 = 14,243
 
#JJB பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகள் - 445,958
 முதல் சுற்றில் பெற்று கொண்ட ஆசனங்கள் - 1 (1x 399,963 = 399,963) 
மீதி 445,958 - 399,963 = 45,995
 
வேறு எந்த கட்சிகளும் 399,963 வாக்குகளை விட அதிகமான மொத்த வாக்குகளை பெற்றிருக்கவில்லை, எனவே முதல் சுற்றில் வேறுகட்சிகளுக்கு தேசிய பட்டியல் ஆசனங்கள் இல்லை..
 
முதல் சுற்றில் வழங்கப்பட்ட மொத்த ஆசனங்கள் 17+7+1 = 25
இன்னும் 29-25 = 4 ஆசனங்கள் மீதம் இருக்கின்றன.
 
இரண்டாம் சுற்று- கணிசமான வாக்குகளை பெற்ற ஏனைய கட்சிகளின் வாக்குகள், முதல் சுற்றில் ஆசனங்களை பெற்ற கட்சிகளின் மீதி வாக்குகள் என்பனவற்றின் அடிப்படையில் முறையே வரும் முதல் நான்கு கட்சிகளுக்கு தலா ஒரு ஆசனம் வீதம் மீதமுள்ள நான்கு ஆசனங்களும் வழங்கப்படும்.
#ITAK - 327,168 ஆசனம் -1
#UNP - 249,435 ஆசனம் -1
#AITC - 67,766 ஆசனம் -1
#OPPP- 67,758 ஆசனம் - 1
#TMVP- 67,692 ஆசனம் - 0
#SLFP- 66,579 ஆசனம் - 0
#EPDP - 61,454 ஆசனம் - 0
#MNA - 55,981 ஆசனம் - 0
#SLPP - 54,319 ( மீதி வாக்குகள்) ஆசனம் - 0க
#JJB - 45,995 ( மீதி வாக்குகள்) ஆசனம் -0
 
மொத்த தேசிய பட்டியல் முடிவு
SLPP 17+0 = 17 
SJB 7+0 = 7 
JJB 1+0 = 1 
ITAK 0+1 = 1 
UNP 0+1 = 1 
AITC 0+1 = 1
OPPP 0+1 = 1
 
பிள்ளையானின் TMVP(67,692) கட்சி ரத்னதேரரின் OPPP (67,758) கட்சியை விட 66 வாக்குகளை குறைவாக பெற்றதால் தனது தேசிய பட்டியலை இழந்தது....
 
66 வாக்குகளால் தனது தேசியப்பட்டியலை இழந்தது பிள்ளையையானின் TMVP கட்சி..... Reviewed by Author on August 08, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.