மக்களுடைய பிரச்சினைகளை நேரடியாக ஆராய்ந்து உரிய தீர்வை பெற்றுக் கொடுக்க விரைந்து செயல்படுவோம்.
வன்னி மாவட்டத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு வாக்களித்து மூன்று
ஆசனங்களை பெற்றுக்கொள்ள ஆதரவு வழங்கிய மக்களுக்கு எனது நன்றிகளை
தெரிவித்துக்கொள்ளுகின்றேன்.
தமிழ்
தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களை தேடி வருவதில்லை
என்கின்ற கருத்து இனிவரும் காலங்களில் மக்கள் மத்தியில் இருந்து வராத
வகையில் மக்களுக்கான பணியை மேற்கொள்ளுவோம் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின்
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், டெலோ கட்சியின் தலைவருமான செல்வம்
அடைக்கலநாதன் தெரிவித்தார்.
நடந்து முடிந்த
பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்த மக்களுக்கு
மன்னாரில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை (7)
மாலை சென்று மக்களுக்கு நன்றிகளை தெரிவித்தார்.
-இதன் போது கலந்து கொண்ட மக்கள் மத்தியில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
-அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
-தேர்தல்
காலங்களில் மட்டுமே மக்களை தேடி வருகின்றார்கள்.அதன் பின் பாராளுமன்ற
உறுப்பினர்கள் வருவது இல்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
-அவ்வாறான
ஒரு நிலமை இனி ஏற்படாது.தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ கட்சி சார்பில்
எங்களுடை பணியாளர்கள் ஒவ்வொறு கிராமங்களிலும் இருப்பார்கள்.
-அவர்கள்
மூலமாகவும் எமது வேளைத்திட்டம் முன்னெடுக்கப்படும்.குறிப்பாக முசலி
பிரதேசத்தில் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு இம்முறை கூடிய வாக்குகள்
கிடைத்துள்ளது.
-இந்த வகையில் முசலி பிரதேசச்
செயலாளர் பிரிவில் உள்ள மக்களுக்கும் எமது நன்றிகள்.நாங்கள் மக்களை தேடி
வந்து பல்வேறு வேளைத்திட்டங்களை முன்னெடுப்போம்.
-ஒவ்வொறு
கிராமங்களுக்கும் சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து உரிய
நடவடிக்கைகளை மேற்கொள்ளுவோம்.மக்கள் எங்களை விமர்சிக்காக வகையில் எமது
வேளைத்திட்டங்கள் அமையும்.
எனவே தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள் என அவர் மேலும் தெரிவித்தார்.
மக்களுடைய பிரச்சினைகளை நேரடியாக ஆராய்ந்து உரிய தீர்வை பெற்றுக் கொடுக்க விரைந்து செயல்படுவோம்.
Reviewed by Author
on
August 08, 2020
Rating:
No comments:
Post a Comment