சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் பல மாவட்டங்களில் மின்சாரத்தடை....
அதிக மழை மற்றும் கடும் காற்று காரணமாக மின் கம்பி மீது மரங்கள் உடைந்து விழுந்த காரணத்தினால் பல பிரதேசங்களில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு முதல் நாட்டின் பல மாவட்டங்களில் இவ்வாறு மின்சாரத் தடை ஏற்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு, களுத்துறை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்சாரத் தடை ஏற்பட்டுள்ளது.
குறித்த பிரதேசங்களில் மின்சார விநியோகத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ரயில் வீதியில் மரமொன்று உடைந்து வீழ்ந்த காரணத்தால் களனிவௌி ரயில் வீதியின் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது..
சீரற்ற காலநிலை காரணமாக நாட்டில் பல மாவட்டங்களில் மின்சாரத்தடை....
Reviewed by Author
on
August 06, 2020
Rating:

No comments:
Post a Comment