அண்மைய செய்திகள்

recent
-

தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மகேல ஜயவர்த்தன.....

தேசிய விளையாட்டுப் பேரவையின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மகேல ஜயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச குறித்த நியமனத்தினை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவின் உறுப்பினர்களாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, இராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா, ஜூலியன் போலிங், திலந்த மலகமுவ, கஸ்தூரி செல்லராஜா வில்சன், சுபுன் வீரசிங்க, ரொஹான் பெர்னாண்டோ, ருவன் கேரகல, சஞ்சீவ விக்ரமநாயக்க, மேஜர் ஜெனரல் ராஜித அம்பேமொஹட்டி, ரொவேனா சமரசிங்க, யஸ்வந்த் முத்தெட்டுவேகம, A.J.S.S எதிரிசூரிய மற்றும் தியுமி அபேசிங்க ஆகியோர் குறித்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்....


தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மகேல ஜயவர்த்தன..... Reviewed by Author on August 21, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.