தேவன் பிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் .ம.வி பாடசாலையில் அமைக்கப்பட்ட அதிபர் காரியாலயம் வைபவ ரீதியாக திறந்து வைப்பு
மடு கல்வி வலயத்திற்குற்பட்ட தேவன் பிட்டி றோமன் கத்தோழிக்க தமிழ் ம.வி பாடசாலையில் அமைக்கப்பட்ட அதிபர் காரியாலய கட்டிடம் நேற்றைய தினம் வியாழக்கிழமை(20) காலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
-வட மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட குறித்த கட்டிட திறப்பு விழா பாடசாலையின் அதிபர் பி.டியூட்சன் தலைமையில் இடம் பெற்றது.
-இதன் போது விருந்தினர்களாக வடக்கு மாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு வைபவ ரீதியாக திறந்து வைத்தனர்.
-குறித்த நிகழ்வில் மடு வலயக் கல்விப்பணிப்பாளர் எஸ்.சத்தியபாலன், பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள்,பழைய மாணவர்கள், பெற்றோர் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
தேவன் பிட்டி றோமன் கத்தோலிக்க தமிழ் .ம.வி பாடசாலையில் அமைக்கப்பட்ட அதிபர் காரியாலயம் வைபவ ரீதியாக திறந்து வைப்பு
Reviewed by Admin
on
August 21, 2020
Rating:

No comments:
Post a Comment