ஆஸ்திரேலியாவில் அகதிகளை விடுவிக்கக்கோரி போராட்டம்: அகதிகள் வழக்கறிஞர்கள் மீது வழக்கு
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் அகதிகள் தஞ்சக்கோரிக்கையாளர்கள் சிறைவைக்கப்பட்டிருக்கும் ஹோட்டலுக்கு வெளியே போராட்டம் நடத்தியதாக 6 அகதிகள் நல வழக்கறிஞர்கள் மீது உத்தரவை மீறியதாக, பொது அமைதியை சீர்குலைத்ததாக, போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி, அந்த ஹோட்டல் அருகே நடந்த ஊர்வலத்தில் 400க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் கலந்து கொண்டதாகக் கூறப்படுகின்றது.
தடுப்பிற்கான மாற்று இடமாகக் கருதப்படும் பிரிஸ்பேன் நகரில் உள்ள Kangaroo Point எனும் ஹோட்டலில் 120 தஞ்சக்கோரிக்கையாளர்கள் சுமார் ஓராண்டாக சிறைவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மனுஸ்தீவு மற்றும் நவுருத்தீவில் செயல்பட்ட ஆஸ்திரேலிய கடல் கடந்த தடுப்பு முகாம்களிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக இந்த ஹோட்டலுக்கு மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த தஞ்சக்கோரிக்கையாளர்கள் 8 ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டுள்ளனர், இவர்கள் சமூகத்தில் வாழ ஆஸ்திரேலிய அரசு அனுமதிக்க வேண்டும் என போராட்ட ஒருங்கிணைப்பாளர் மாத்யூ செப்பர்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.
வரும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு முன்பாக தஞ்சக்கோரிக்கையாளர்கள் பிரிஸ்பேன் சமூகத்திற்குள் விடுவிக்க வேண்டும் என்பது போராட்டக்காரர்களின் கோரிக்கையாக இருக்கின்றது.

No comments:
Post a Comment