அண்மைய செய்திகள்

recent
-

பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 14 இலங்கையர்கள் உட்பட ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயம்......

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்துள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளது.லெபனானுக்கான இலங்கை தூதரகம் இந்த
விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளது.

 காயமடைந்துள்ள இலங்கையர்கள் லெபனானில் உள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெற்று வருவதாகவும்    தெரிவிக்கப்படுகின்றது.அவர்களுள் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள ஆயுதக்களஞ்சியசாலை ஒன்றில் கடந்த 4ஆம் திகதி ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 137 ஆக அதிகரித்துள்ள நிலையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக லெபனானில் உள்ள இலங்கை
தூதரகம் தெரிவித்துள்ளது.

லெபனானில் சுமார் 25 ஆயிரம் இலங்கையர்கள் வசித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.வெடிப்பு சம்பவத்தில் பெய்ரூட்டிலுள்ள
இலங்கை தூதரகத்திற்கு சேதம் ஏற்பட்டதாகவும் எவ்வாறாயினும் தூதரக
பணியாளர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





 

பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 14 இலங்கையர்கள் உட்பட ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காயம்...... Reviewed by Author on August 08, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.