அண்மைய செய்திகள்

recent
-

120 இலட்சம் பெறுமதியான கேரளா கஞ்சா மீட்பு

களனி பகுதியில் போதை பொருட்களை தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் அறுவர், களனி குற்ற விசாரணை பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 ஏற்கனவே, கைதான ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக மேலும் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பேலியகொட மீன் விற்பனை நிலையத்திற்கு அருகாமையில் வைத்து நேற்று (26) பகல் குறித்த அறுவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 இவர்களிடம் இருந்து 40 கிலோ 700 கிராம் கேரளா கஞ்சா போதை பொருள் கைப்பற்றப்பட்டதுடன் அவற்றின் பெறுமதி 120 இலட்சம் என பொலிஸார் தெரிவித்தனர். மேலும் இவர்கள் கஞ்சா போதை பொருளை கொண்டுச் செல்ல பயன்படுத்திய ஜூப் வண்டி ஒன்றையும் முச்சக்கர வண்டி ஒன்றையும் பொலிஸார் கையகப்படுத்தியுள்ளனர்


. கைது செய்யப்பட்டவர்கள் வத்தளை, குணசிங்கபுர மற்றும் களனி ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 56 முதல் 47 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர். இவர்கள் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுகின்றனர்.
120 இலட்சம் பெறுமதியான கேரளா கஞ்சா மீட்பு Reviewed by Author on September 27, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.