மன்னார் பெரிய கரிசல் பகுதியில் வாகனத்தில் பதுக்கி வைக்கப்பட்ட நிலையில் 1024 கிலோ மஞ்சள் கட்டி மூடைகள் மீட்பு.
சுமார் 1024 கி லோ 200 கிராம் மஞ்சள் மூடைகள் இவ்வாறு பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்கள் யாரும் இல்லாத நிலையில் பெரிய கரிசல் பகுதியில் லொறி நிறுத்தப்பட்டுள்ள நிலையில் கைப்பற்றப்பட்ட மஞ்சள் மூடைகள் பேசாலை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்ட்டுவருகின்றது.
குறித்த மஞ்சள் இந்தியாவில் இருந்து கடத்தல் மூலம் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ள சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது.
மேலும் பேசாலை பொலிசாரினால் ஒரு மாதத்தில் 3 மஞ்சள் கடத்தல் சம்பவங்கள் பிடிக்கப்பட்டு உள்ளதாக பேசாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தமிந்த சோமஜித் தெரிவித்தார்.
மன்னார் பெரிய கரிசல் பகுதியில் வாகனத்தில் பதுக்கி வைக்கப்பட்ட நிலையில் 1024 கிலோ மஞ்சள் கட்டி மூடைகள் மீட்பு.
Reviewed by Author
on
September 27, 2020
Rating:

No comments:
Post a Comment