மன்னாரில் -தடை செய்யப்பட்ட மீன்பிடி தொழில்களை தடுப்பது தொடர்பான கலந்துரையாடல்-
மன்னாரில் -தடை செய்யப்பட்ட மீன்பிடி தொழில்களை தடுப்பது தொடர்பான கலந்துரையாடல்
மன்னார் நகர் நிருபர்
17-09-2020
நாடளவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை தடுத்து நிலையான மீன்பிடி தொழிலை ஊக்குவிப்போம் எனும் தொனிப்பொருளில் மீனவ சமூகம் பொறுப்பு மிக்க அதிகாரிகள் மற்றும் ஒத்துழைப்பாளர்களுக்கிடையிலான கலந்துரையாடல் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு கிழக்கு மாகாண இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாசனின் பங்குபற்றுதலுடன் தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் அதன் மாவட்ட இணைப்பாளர் திரு.பெனடிற் தலைமையில் இன்று காலை 9 மணியளவில் இடம் பெற்றது
குறித்த கலந்துரையாடலில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகள் மற்றும் மீனவர்கள் தொடர்பாக செயற்பட்டுவரும் அரசசார்பற்ற நிறுவனக்களின் அதிகாரிகள் ஊடாக விசேட தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டது
அதே நேரத்தில் குறித்த கலந்துரையாடலில் நாட்டில் தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பாகவும் அவற்றினால் ஏற்படும் சமூக பொருளாதார ரீதியான பாதிப்புக்கள் மற்றும்
விளைவுகள் தொடர்பாக மீனவ சமூகத்தை சேர்ந்த பிரதி நிதிகளுக்கு தெளிவூட்டப்பட்டது
மேலும் தடை செய்யப்பட்ட மீன்பிடி தொடர்பாக மக்கள் சார்பான அபிப்பிராஜங்கள் தொடர்பாகவும் அவர்கள் மத்தியிலான சந்தேகங்கள் தொடர்பாகவும் பொதுக்கலந்துரையாடல் மூலம் பதில் வழங்கப்படமை குறிப்பிடதக்கது
மன்னாரில் -தடை செய்யப்பட்ட மீன்பிடி தொழில்களை தடுப்பது தொடர்பான கலந்துரையாடல்-
Reviewed by Author
on
September 17, 2020
Rating:

No comments:
Post a Comment