மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற திருவள்ளுவர் விழா.Phots&Video
மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற திருவள்ளுவர் விழா.
(மன்னார் நிருபர்)
(17-09-2020)
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை காலை திருவள்ளுவர் விழா இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் குறித்த விழா இடம் பெற்றது.
காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் திருவள்ளுவரை ஏந்தியவாறு பவனி இடம் பெற்றது.
முதலில் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் திருவள்ளுவரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தார்.
அதனைத்தொடர்ந்து திருவள்ளுவர் சிலையை ஏந்தியவாறு மாவட்டச் செயலகம் நோக்கி ஊர்வலம் இடம் பெற்றது.
பின்னர் மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது நிகழ்வகளில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் அரசாங்க அதிபர்,மேலதிக அரசாங்க அதிபர்,பிரதேசச் செயலாளர்கள், மாவட்டச் செயலக அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நியூமன்னார் செய்திகள்
மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்ற திருவள்ளுவர் விழா.Phots&Video
Reviewed by Author
on
September 17, 2020
Rating:

No comments:
Post a Comment