வன்னி மாவட்ட புதிய பிரதி பொலிஸ்மா அதிபர் கடமையேற்றார்!
வன்னி மாவட்டத்தின் பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றிவந்த தம்மிக்க பிரியந்த களுத்துறை பகுதிக்கு மாற்றலாகி சென்றநிலையில் புதிய பொலிஸ்மா அதிபராக கண்டியில் மோப்பநாய்கள் பிரிவிற்கு பொறுப்பாகவிருந்து பின்னர் தகவல் தொடர்பாடல் ஊடக்கதுறைக்கு பொறுப்பாக இருந்த லால் செனவிரத்தின நியமிக்கப்பட்டுள்ளதுடன், இன்றையதினம் உத்தியோக பூர்வமாக அவர் தனது கடைமகளை பொறுப்பேற்று கொண்டார்.
பதவி ஏற்பு நிகழ்வு கண்டிவீதியில் அமைந்துள்ள பொலிஸ்மா அதிபரின் காரியாலயத்தில் இடம்பெற்றது. இதன்போது புதிய பொலிஸ்மா அதிபருக்கு அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றது.
நிகழ்வில் பொலிஸ் அத்தியட்சகர் திஸ்சலால்சில்வா, உதவி பொலிஸ் அத்தியட்சகர் மல்வலகே,தலைமை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி மானவடு மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
வன்னி மாவட்ட புதிய பிரதி பொலிஸ்மா அதிபர் கடமையேற்றார்!
Reviewed by Author
on
September 23, 2020
Rating:

No comments:
Post a Comment