அண்மைய செய்திகள்

recent
-

மாணவர்கள் மற்றும் பாதுகாப்பு படையினரின் சீருடைகளை இனி உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய ஆராய்வு:

எதிர்வரும் வருடத்திலிருந்து பாடசாலை மற்றும் பாதுகாப்பு படையனரின் சீருடைகளுக்கு தேவையான துணிகளை வழங்கும் பொறுப்பில் அதிகூடிய வீதத்தை உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு வழங்குவது தொடர்பாக நான் சிந்தித்துள்ளேன். அதனால் - பாரிய மற்றும் சிறிய அளவிலான உள்நாட்டு துணி உற்பத்தியாளர்கள் உயர் தரத்திலான உற்பத்தியை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும்.

 தங்கொட்டுவ தொழிற்பேட்டை Dankotuwa Textile Mill (Pvt) Ltd, கந்தான, கப்புவத்த வேன்காட் Vanguard Industrial (Pvt) Ltd மற்றும் வத்தளை Textile Mill (Pvt) Ltd நிறுவனங்களின் செயற்பாடுகளைப் பார்வையிட நேற்று அங்கு சென்றிருந்தேன். பாடசாலை சீருடைகளுக்காக செயற்படுத்தப்பட்ட வவுச்சர் முறைமையின் காரணமாக பாரிய முதலீட்டுடன் ஆரம்பிக்கப்பட்ட பல நிறுவனங்களை மூட வேண்டி ஏற்பட்டதாக துணி உற்பத்தி தொழிற்துறையினர் குறிப்பிட்டனர்.

 இதன் காரணமாக அதிகமானோர் தொழில்களை இழந்துள்ளனர். தங்கொட்டுவ கைத்தொழில் பேட்டையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள Creative Textile Mill (Pvt) Ltd நிறுவனத்தை முதலில் பார்வையிட்டேன். இரண்டாயிரம் மில்லியன் ரூபாய் முதலீட்டுடன் நிர்மாணிக்கப்பட்ட மேற்படி தொழிற்சாலை 2015ஆம் ஆண்டு முதல் மூடப்பட்டுள்ளது. எந்தவொரு வருமானமும் பெறப்படாத நிலையில் ஒரு வருடத்திற்கு எண்பது இலட்சம் ரூபாய்கள் வட்டியாக அதன் உரிமையாளர் வங்கிக்கு செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 Creative Textile நிறுவனமானது - இந்தியா, பாகிஸ்தான் மற்றும் சீனா போன்ற நாடுகளிலிருந்து நூல் இறக்குமதி செய்து துணியை உற்பத்தி செய்வதன் மூலம் 500 பேருக்கு தொழில் வாய்ப்பு கிடைக்கப்பெற்றது. அதன் உற்பத்தி அளவை ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் துணி மீற்றர்கள் வரை அதிகரிக்க இப்போது எதிர்பார்க்கப்பட்டுள்ளது. வருடாந்த பாடசாலை சீருடைத் தேவை 11 மில்லியன் மீற்றர்களாகும்.

 துணி உற்பத்தியை உடனடியாக ஆரம்பிப்பதற்கு அந்த நிறுவனத்தின் நிர்வாகிகளுக்கு நான் ஆர்வமூட்டியதுடன், சுயதொழிலாக துணி உற்பத்தியில் ஈடுபட்டுள்ளவர்களும் பாடசாலை சீருடைக்கு அவசியமான துணிகளை வழங்குவதற்கான வாய்ப்புகள் அவர்களுக்கு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதனையும் நான் அங்கு தெரிவித்தேன். உள்நாட்டு துணி உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இறக்குமதி செலவினங்களை 68 வீதத்தினால் சேமிக்க முடியும் என்பதையும் நான் சுட்டிக்காட்டினேன்.

 உள்நாட்டு துணியை கொள்வனவு செய்வதன் மூலம் கல்வி அமைச்சினால் வருடாந்தம் 80 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகமான நிதியை சேமிக்க முடியும். மேற்படி பிரதேசத்தை சேர்ந்த அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் தங்கொட்டுவ கைத்தொழில் பேட்டை தொடர்பாக முன்வைத்த பிரச்சினைகள் தொடர்பாகவும் நான் அங்கு ஆராய்ந்தேன். 2015ஆம் ஆண்டுக்கு முன்னர் பாடசாலை சீருடை தேவையின் 40 வீதத்திற்கு தமது பங்களிப்பை வழங்கிய கந்தானை, கப்புவத்த வேன்காட் நிறுவனம், தற்போது படுக்கை விரிப்பு மற்றும் துவாய்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது.

 நிறுவனத்தின் முழுமையான உற்பத்திச் செயற்பாடுகளை நான் அவதானித்த பின்பு, உள்நாட்டு சந்தையில் துணிகளுக்கு நிலவுகின்ற தேவையை நிறைவு செய்யுமளவிற்கு நிறுவனத்தின் உற்பத்தி அளளவை அதிகரிக்குமாறு அதன் முகாமைத்துவத்திற்கு ஆர்வமூட்டினேன். தமது நிறுவனத்தினாலும், பாடசாலை சீருடை துணிகளுக்கான தேவையில் 30 வீதத்தை வழங்க முடியும் என்று நிறுவனத்தின் நிர்வாகம் குறிப்பிட்டது.

 Dankotuwa Textile Mill (Pvt) Ltd, நிறுவனத்தின் கிளையான வத்தளை கிலிப்டெக்ஸ் Creative Textile Mill (Pvt) Ltd நிறுவனத்தையும் நான் பார்வையிட்டேன். முப்படையினரின் சீருடைகளுக்காக துணி அங்கு உற்பத்தி செய்யப்படுகின்றது. 1500 பேர் அளவில் அங்கு சேவையில் ஈடுபடுகின்றனர். பாதுகாப்பு படையினருக்கு அவசியமான வகையில் துணிகளுக்கு நிறமூட்டுவது நிறுவனத்தின் பிரதான செயற்பாடாகும்.

 இறக்குமதி செய்யப்படுகின்ற துணிகள் பரீட்சிக்கப்படுவதில்லை என்பதுடன், உள்நாட்டில் உற்பத்தி செய்கின்ற துணிகளை பரீட்சிப்பதற்காக அதிகளவில் தாம் செலவிட வேண்டியுள்ளதாக நிர்வாகத்தினர் குறிப்பிட்டனர். ஆடைகளைக் கழுவ பயன்படுத்தப்படும் சலவைத் தூள் உரிய தரத்துடன் இல்லாமையின் காரணமாகத் துணிகளின் நிறத்திற்கு பாரிய சேதம் ஏற்படுவதாகவும் அவர்கள் கவலை வெளியிட்டனர்.

 உள்நாட்டு தொழிற்துறையினருக்கு அரசாங்கம் வழங்கும் ஒத்துழைப்பை பயன்படுத்தி - உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தை வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ள முயற்சி செய்யுமாறு அவர்கள நான் கேட்டுக்கொண்டேன். இந்த நிறுவனம் உற்பத்தி செய்கின்ற - நாட்டின் தேசிய மற்றும் பௌத்த கொடிகளை நான் பார்வையிட்டதுடன், தேவைக்கு ஏற்ற வகையில் உள்நாட்டில் அவற்றின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு நிறுவனத்தின் உரிமையாளர்களை கேடரடுக்கொண்டேன்.

மாணவர்கள் மற்றும் பாதுகாப்பு படையினரின் சீருடைகளை இனி உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய ஆராய்வு: Reviewed by Author on September 29, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.