சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளின் தீர்ப்பை விரைவுபடுத்த அரசாங்கம் தீர்மானம்!
அத்துடன், குழந்தையின் நல்வாழ்வுக்கு இடையூறு விளைவிக்காத வகையில் வழக்கு குறித்த சாட்சியங்களைப் பதிவுசெய்ய மூடிய நீதிமன்ற வசதிகளை வழங்குவதற்கும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், முன்பள்ளி மற்றும் தொடக்கக் கல்வி, பாடசாலைகள் ஆகியவற்றின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றபோது இவ்விடயம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அவநம்பிக்கையான மற்றும் பாதிக்கப்பட்ட பெண்களின் நலனுக்காக பெண்கள் மீதான தேசியக் குழுவை அமைப்பதற்கு நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் தேவையான சட்டங்களை இயற்றுவதன் அவசியமும் இந்தக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், அமைச்சர் பியால் நிஷாந்தா, ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜெயசுந்தர, அமைச்சரவை மற்றும் அமைச்சகங்களின் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளின் தீர்ப்பை விரைவுபடுத்த அரசாங்கம் தீர்மானம்!
Reviewed by Author
on
September 23, 2020
Rating:

No comments:
Post a Comment