அண்மைய செய்திகள்

recent
-

டாஸ்மேனியாவில் கரையொதுங்கிய திமிங்கலங்களில் 380 திமிங்கலங்கள் உயிரிழப்பு

அவுஸ்ரேலியாவின் தெற்கு கடற்கரையில் சிக்கித் தவித்த 470 திமிங்கலங்களில் பெரும்பாலானவை இறந்துவிட்டன என்று அதிகாரிகள் நேற்று  (புதன்கிழமை) தெரிவித்துள்ளனர்.

 டாஸ்மேனியா மேற்கு கடற்கரை பகுதியில் கடந்த சில நாட்களாக திமிங்கலங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்குகின்றன. இவற்றை மீட்கும் பணிகள் இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கடுமையான மற்றும் ஆபத்தான மீட்பு முயற்சிகளுக்குப் பின் குறைந்தது 380 திமிங்கலங்கள் இறந்துவிட்டன என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

 டாஸ்மேனியா கடற்பகுதிகள் திமிங்கலங்கள் அதிகளவில் காணப்பட்டாலும் ஒரேயடியாக திமிங்கலங்கள் கரையொதுங்கியதை கடந்த 10 வருடங்களில் காண முடியவில்லை என உயிரியலாளா்கள் தெரிவிக்கின்றனர். இறுதியாக 2009 இல் சுமார் 200 திமிங்கலங்கள் இவ்வாறு டாஸ்மேனியா கடற்கரை பகுதிகளில் கரையொதுங்கின. இதேவேளை, தற்போது கரையொதுங்கிய திமிங்கலங்கள் பல அணுக முடியாத இடங்களில் உள்ளன என்றும் இதனால் மீட்புக் குழுவினர் அவற்றை மீட்பதில் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

.
டாஸ்மேனியாவில் கரையொதுங்கிய திமிங்கலங்களில் 380 திமிங்கலங்கள் உயிரிழப்பு Reviewed by Author on September 24, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.