ஆப்கானில் குண்டுவெடிப்பு: 7 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழப்பு
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் குண்டு வெடிப்புக்குப் பயன்படுத்தப்பட்டுள்ள ஆயுதங்களைப் பார்க்கும்போது இதனை தலிபான்கள் நடத்தி இருக்கலாம் என்று இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் டோஹாவில் ஆப்கன் அரசுக்கும், தலிபான்களுக்கும் இடையே நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் தங்களால் கடத்தப்பட்ட இராணுவ வீர்ரகளைத் தலிபான்கள் விடுவித்தனர்.
இந்த நிலையில் இந்தத் தாக்குதலைத் தலிபான்கள்நடத்தியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், தலிபான்களை அவ்வப்போது ஆப்கன் அரசு விடுவித்து வருகிறது.
மேலும்,ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையே கட்டாரில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஜனாதிபதி அஷ்ரப் கானி சம்மதம் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டுவர அவர்களின் நிபந்தனைகளை ஏற்று 900 தலிபான்கள்விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்கானில் குண்டுவெடிப்பு: 7 பெண்கள் உட்பட 14 பேர் உயிரிழப்பு
Reviewed by Author
on
September 29, 2020
Rating:

No comments:
Post a Comment