2 மணி நேரத்தில் 401 பேர் கைது
நேற்று (18) இரவு 7 மணி தொடக்கம் 9 மணி அளவில் நடைபெற்ற இச்சுற்றிவளைப்பின் போது 401 நபர்கள் கைது செய்யப்பட்டதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இந்நடவடிக்கையின் போது 65 கிராம் 371 மில்லி கிராம் ஹெரோயினோடு 164 பேரும், 210 கிராம் 510 மில்லி கிராம் கஞ்ஜாவுடன் 88 பேரும், 26 கிராம் 70 மில்லி கிராம் ஐஸுடன் 9 பேரும் கைது செய்யபட்டுள்ளனர்.
இதற்கிடையில், மேல் மாகாணத்தில் இன்று காலையில் நடந்த தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோத போதைப் பொருளுடன் மேலும் 530 பேர் கைது செய்யபட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் அறிவித்துள்ளது.
2 மணி நேரத்தில் 401 பேர் கைது
Reviewed by Author
on
September 19, 2020
Rating:

No comments:
Post a Comment