அமெரிக்காவில் டிக் டொக் செயலியை பதிவிறக்கம் செய்ய விதிக்கப்பட்ட தடை ஒத்திவைப்பு
அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள முறுகல் நிலையை அடுத்து ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் சீனாவிற்கு சொந்தமான செயலிகள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறி அதனை தடை செய்வது குறித்து ஆராய்ந்து வந்தது.
அதனைத் தொடர்ந்து அந்த செயலிகளுக்கு தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் ஜனாதிபதி ட்ரம்ப் கடந்த மாதம 6ஆம் திகதி கையெழுத்திட்டார்.
இந்த தடை உத்தரவு 45 நாட்களில் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டிருந்தது.
இதற்கிடையில் டிக் டொக்கின் தாய் நிறுவனமான பைட்டான்ஸ் செப்டம்பர் 15ஆம் திகதிக்குள் டிக் டொக் செயலியை அமெரிக்க நிறுவனத்திடம் விற்கவும் ட்ரம்ப் காலக்கெடு விதித்திருந்தார்.
இந்த நிலையில் ட்ரம்பின் நிர்வாக உத்தரவில் குறிப்பிட்டபடி தடை உத்தரவுக்கான 45 நாள் காலக்கெடு நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
அதனைத் தொடர்ந்து டிக் டொக் மற்றும் வீ சாட் செயலிகளுக்கு அமெரிக்காவில் இன்று முதல் தடை விதிக்கப்படுவதாகட்ரம்ப் நிர்வாகம் அறிவித்தது.
இதற்கான ஆணையை வெளியிட்ட அமெரிக்க வர்த்தகத்துறை, எந்தவொரு ஆப் ஸ்டோரிலும் சீன நிறுவனத்திற்கு சொந்தமான, டிக்டொக் மற்றும் வீ சட் செயலிகளை பதிவிறக்க முடியாது என கூறியது.
இந்த நிலையில், முக்கிய திருப்பமாக டிக் டொக் செயலியை பதிவிறக்கம் செய்ய விதிக்கப்பட்ட தடையை ஒருவாரத்திற்கு தள்ளிவைப்பதாக அமெரிக்க வர்த்தகத்துறை தெரிவித்துள்ளது.
ஆராக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனத்துடன் டிக் டொக் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் நேர்மறையான முன்னேற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும் இதனால், தடை தள்ளிவைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
.
.
அமெரிக்காவில் டிக் டொக் செயலியை பதிவிறக்கம் செய்ய விதிக்கப்பட்ட தடை ஒத்திவைப்பு
Reviewed by Author
on
September 20, 2020
Rating:
Reviewed by Author
on
September 20, 2020
Rating:


No comments:
Post a Comment