நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு அதிரடி திருப்பம்; தீவில் நடிகைகள் நடத்திய விருந்து
பவானா அணைக்கு அருகில் உள்ள ஒரு தீவில் நடிகைகள் நடத்திய விருந்து குறித்த புதிய விவரங்களை மோட்டார் படகு ஓட்டும் படகு வீரர் ஜெகதீஷ் கோபிநாத் தாஸ் பகிர்ந்து உள்ளார். அவர் போதை தடுப்பு போலீசாரை சந்தித்து அவர்கள் முன் அவர் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
அவரது வாக்குமூலத்தில் சுசாந்த் மற்றும் அவரது நண்பர்கள் பெரும்பாலும் தீவுக்கு வருவது குறித்து அவர் கூறி உள்ளார். 2018 ஆம் ஆண்டில், அப்பாஸ் மற்றும் ரம்ஜான் அலி என்ற இரண்டு நபர்களிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது, அவர்கள் பவானா அணையைப் பார்வையிட வேண்டும் என்று சொன்னார்கள். அவர்களுடன் சுஷாந்த் தனது படகில் சவாரி செய்து, அணையைப் பார்வையிட்டு நீச்சல் அங்கு நீச்சல் அடித்தார்.அவர்கள் திரும்பி வந்தபோது, எனக்கு ரூ .16,000 வழங்கினர்.
சுஷாந்தும் அவரது நண்பர்களும் அடிக்கடி பவானாவுக்கு வந்தனர். அவர்கள் கவாண்டே என்ற தீவில் நேரத்தை செலவிட்டனர்.
இதற்கிடையில், சாரா அலி கான், ரியா சக்ரபோர்த்தி மற்றும் ஷ்ரத்தா கபூர் ஆகியோரும் அணையை பார்வையிட்டனர், ஆனால் தனித்தனியாக.
சுஷாந்த் ரியாவுடன் பல மணிநேரம் தீவில் கழிப்பார். ஷ்ரத்தா நடிகருடன் ஒரு முறை மட்டுமே அந்த இடத்தைப் பார்வையிட்டார், அதே நேரத்தில் சாரா அவருடன் மூன்று நான்கு முறை வந்துள்ளார்.
சுஷாந்தின் பிளாட்மேட் சித்தார்த் பிதானி, அவரது நெருங்கிய உதவியாளர்களான தீபேஷ் சாவந்த் மற்றும் சாமுவேல் மிராண்டா, ரியாவின் சகோதரர் ஷோயிக் சக்ரபோர்த்தி மற்றும் பலர் அங்கு வந்து விருந்து நடத்தி உள்ளனர்.
நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கு அதிரடி திருப்பம்; தீவில் நடிகைகள் நடத்திய விருந்து
Reviewed by Author
on
September 22, 2020
Rating:

No comments:
Post a Comment