-மன்னாரில் கடும் மழை-பல கிராமங்கள் நீரில் மூழ்கியது-video&Photos
மன்னாரில் தாழ் நில கிராமங்கள் நீரில் மூழ்கின
மன்னார் நகர் நிருபர்
02.09.2020
மன்னார் மாவட்டத்தில் நேற்றும் இன்றும் பெய்த கடும் மழை காரணமாக தாழ்நில கிராமங்கள் முற்றிலுமாக நீரில் மூழ்கியுள்ளான
குறிப்பாக மன்னார் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட சாந்திபுரம்,ஜீவபுரம்,ஜிம்றோன் நகர்,எமில்நகர்,எழுத்தூர் உட்பட பல்வேறு கிராமங்கள் முற்றிலுமாக நீரினால் மூழ்கியுள்ளதுடன் மழை நீர் வடிந்து செல்ல கூடிய விதமாக வடிகால் அமைப்புக்கள் ஒழுங்கான முறையில் பராமறிக்கப்படாமையினால் மழை நீர் அனைத்தும் மக்களின் வீடுகளில் தேங்கியுள்ளது
அதே நேரத்தில் முன்னால் பிரதேச செயளாலர்களினாலும் காணி உத்தியோகஸ்தர்களாலும் புத்திசாலித்தனமாக கால்வாய்களுக்குள்லும் கால்வாய்களுக்கு அருகிலும் வழங்கப்பட்ட காணிகள் முற்றிலும் நீரினால் மூழ்கியுள்ளதுடன் மழை நீர் வடிந்தோடவும் தடையாக உள்ளது இவ்வாறே தொடரும் பட்சத்தில் மீண்டும் மழை பெய்யும் பட்சத்தில் மக்கள் இடம் பெயரவேண்டிய சூழல் ஏற்படும் என்பது குறிப்பிடதக்கது
எனவே மன்னார் நகரசபை மற்றும் பிரதேச செயலகம் உடனடியாக குறித்த விடயத்தில் கவனம் செலுத்துமாறு பொதுமக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-மன்னாரில் கடும் மழை-பல கிராமங்கள் நீரில் மூழ்கியது-video&Photos
Reviewed by Admin
on
September 02, 2020
Rating:

No comments:
Post a Comment