மன்னார் எருக்கலம்பிட்டி புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்ற இருவர் குடும்பத்தினருடன் இணைப்பு.(PHOTOS,VIDEO)-
மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்தில் போதை பொருள் பாவனையால் ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில் 'போதையற்ற புதிய கிராமத்தை உருவாக்குவோம்' என்னும் தொனிப்பொருளில் விரைந்து செயல் பட்ட பள்ளிவாயில்களின் நிர்வாகம் சமூக அபிவிருத்தி சங்கங்கள் மற்றும் அமைப்புகள் ஜனாசா நலன்புரிசங்கம் மற்றும் கிராமத்தின் ஆன்மீகத்தலைவர்கள் (மௌலவி) கல்விமான்கள் சமூக நலன் விரும்பிகள் கிராம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் இணைந்து எருக்கலம்பிட்டி சமூக சீர்திருத்த அமைப்பு உத்தியோக பூர்வமாக கடந்த 01.06.2020. தொடங்கி வைக்கப்பட்டது
போதைப் பொருள் பாவனை மற்றும் விற்பனையை தடுக்கும் பல்வேறு வேலைத்திட்டத்தின் ஊடாக இதற்கான புனர்வாழ்வு மையம் கடந்த 20.09.2020. அன்று வைபவ ரீதியாக திறந்துவைக்கப்பட்டு புனர்வாழ்வு மையத்தில் 9 நபர்கள் இணைக்கப்பட்டனர்.
இவர்களுக்கான உணவு தங்கும் இடம் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ஆலோசனை சேவைகள் ஆன்மீக வழிகாட்டல்கள் என்பன இடம் பெற்று குறித்த 9 நபர்களில் புனர்வாழ்வு பெற்ற இரண்டு நபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை(7.10.2020.) இரவு 8.30. மணியளவில் புனர்வாழ்வு மையத்தில் இருந்து உத்தியோக பூர்வமாக மருத்துவ பிரிசோதனையின் பின்னர் சமூகத்துடன் இணைக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வு வைபவ ரீதியாக மத அனுஸ்தானங்களுடன் இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ,பொலிஸ் அதிகாரி கலந்து கொண்டதுடன் புனர்வாழ்வு வழங்கப்பட்டவர்களுக்கு உலர் உணவு பொதிகளும் வழங்கப்பட்டு குடும்பத்தினரிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் எருக்கலம்பிட்டி புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்ற இருவர் குடும்பத்தினருடன் இணைப்பு.(PHOTOS,VIDEO)-
Reviewed by Author
on
October 07, 2020
Rating:

No comments:
Post a Comment