மட்டக்களப்பு- ஆரையம்பதி ஆடைத் தொழிற்சாலை தற்காலிகமாக பூட்டு!
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “குறித்த ஆடைத் தொழிற்சாலையில் சுமார் 3 ஆயிரம் பேர் தொழில் புரிந்துவருகின்றனர் இந்த நிலையில் தற்போது மினுவாங் கொடையில் உள்ள ஆடைத் தொழிற்சாலையில் ஏற்பட்ட கொரோனா தொற்றுதலையடுத்து இந்த ஆடைத்தொழிற்சாலையில் தற்போது ஊழியர்கள் குறைக்கப்பட்டு இங்குள்ள பணியாளர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொண்டு ஆடைத் தொழிற்சாலை இயங்கிவருகின்றது.
இருந்தபோதும் தற்போது களுவாஞ்சிக்குடி மாவடிமுன்மாரியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் இருவருது சகோதரிகள் உறவினர்கள் குறித்த அடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர்.
இதன் காரணமாக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு பி.சி.ஆர் பிரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் குறித்த ஆடைத் தொழிற்சாலையை தற்காலிகமாக இன்றில் இருந்து மூடி சுகாதார நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பொது சுகாதார அதிகாரிகள் ஆடைத்தொழிற்சாலை நிருவாகத்திற்கு அறிவுரை வழங்கியதையடுத்து உடனடியாக ஆடைத்தொழிற்சாலை மூடப்பட்டுள்ளது .
இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் அறிக்கைகள் வந்த பின்னர் இது தொடர்பாக தீர்மானம் எடுக்கமுடியும்” என அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு- ஆரையம்பதி ஆடைத் தொழிற்சாலை தற்காலிகமாக பூட்டு!
Reviewed by Author
on
October 30, 2020
Rating:
Reviewed by Author
on
October 30, 2020
Rating:


No comments:
Post a Comment