அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுக்கான மூன்றாவது விவாதம் இன்று!
தேர்தல் நடைபெறுவதற்கு இன்னமும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், பிடென் கருத்துக் கணிப்புகளில் தேசிய அளவில் முன்னணியில் உள்ளார்.
அமெரிக்காவில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் குடியரசுக் கட்சி வேட்பாளர் ட்ரம்புக்கும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கும் இடையே கடந்த மாதம் 29ஆம் திகதி ஓஹியோ மாகாணத்தில் முதல் நேரடி விவாதம் நடந்தது.
இதன்போது, கொரோனா வைரஸ் பாதிப்பு, பொருளாதார சரிவு உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் காரசாரமாக விவாதம் நடத்தினர்.
இந்த சூழலில் ஜனாதிபதி ட்ரம்புக்கும் அவரது மனைவி மெலனியாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ட்ரம்ப் 4 நாட்களுக்கு பின்னர் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார்.
இதனிடையே ட்ரம்ப் மற்றும் ஜோ பிடன் இடையிலான 2ஆவது நேரடி விவாதம் கடந்த 15ஆம் திகதி புளோரிடா மாகாணத்தில் நடைபெறுவதாக இருந்தது.
நேரடி விவாத நிகழ்ச்சி, காணொளி காட்சி மூலம் நடைபெறும் என ஜனாதிபதி தேர்தலுக்கான விவாத ஒருங்கிணைப்பு ஆணையம் அறிவித்ததற்கு ட்ரம்ப் மற்றும் ஜோ பிடன் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த விவாதம் இரத்து செய்யப்பட்டது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக இரு கட்சி சார்பிலும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவோர் ஒரே மேடையில் நேருக்கு நேர் பங்கேற்கும் மூன்று விவாத நிகழ்ச்சிகளும், துணை ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடுவோர் பங்கேற்கும் ஒரு விவாத நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியை ஜனாதிபதி தேர்தல் விவாத ஆணையம் நடத்திவருகிறமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களுக்கான மூன்றாவது விவாதம் இன்று!
Reviewed by Author
on
October 22, 2020
Rating:
Reviewed by Author
on
October 22, 2020
Rating:


No comments:
Post a Comment