உணவு தேடி வந்த மரையை கொலை செய்த இருவர் கைது
தகவல் ஒன்றினை அடிப்படையாக வைத்து அப்பகுதியில் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட இராணுவத்தினர் 37 கிலோ எடை இறைச்சியை தம்வசம் சட்டவிரோதமாக கடத்திய ஹோட்டல் உரிமையாளர் உட்பட இருவரை கைது செய்திருந்தனர்.
இதன்போது கைதானவர்கள் அக்கரைப்பற்று விநாயகபுரம் பகுதியை சேர்ந்த 55 மற்றும் 42 வயதினை உடையவர்கள் எனவும் சந்தேக நபர்கள் அக்கரைப்பற்று பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இவ்வாறு ஒப்படைக்கப்பட்டவர்கள் விசாரணை செய்யப்பட்ட பின்னர் அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
உணவு தேடி வந்த மரையை கொலை செய்த இருவர் கைது
Reviewed by Author
on
October 03, 2020
Rating:

No comments:
Post a Comment