அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சியில் ஈழத் தமிழர்களின் பழங்கால தொல்லியல் ஆதாரங்கள்! யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர் கண்டுபிடிப்பு

கிளிநொச்சி - பூநகரி பகுதியிலுள்ள முழங்காவில் நகருக்கு அண்மையில் நாகபடுவான் பகுதியில் நாக வழிபாட்டை குலமரபுத் தெய்வ வழிபாடாக மக்கள் கொண்டிருந்தமை தொடர்பிலான தொல்லியல் ஆதாரங்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


 யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை, தொல்லியல் துறையின் மூத்த பேராசிரியர் புஷ்பரட்ணம் இதனை கண்டுபிடித்துள்ளார். இந்த நிலையில், நாக பாம்பை பானையில் வைத்து வழிபாடுகளை செய்தமைக்கான ஆதரங்களும் கிடைக்கப் பெற்றுள்ளதாக பேராசிரியர் புஷ்பரட்ணம் ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

 வட இலங்கை மக்களிடையே நாகத்தை பானைகளில் வைத்து வழிபாடு செய்த தொன்மையான வரலாறு தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

கிளிநொச்சியில் ஈழத் தமிழர்களின் பழங்கால தொல்லியல் ஆதாரங்கள்! யாழ்.பல்கலைக்கழக பேராசிரியர் கண்டுபிடிப்பு Reviewed by Author on October 19, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.