பாரிஸ் நகரை உலுக்கிய பேராசியர் படுகொலை: ஆயிரக்கணக்கானோர் குவிந்து கண்ணீர் அஞ்சலி
18 வயதுடைய இளைஞன் ஒருவன் கத்தி மூலம் தலையை துண்டித்து பேராசியர் Samuel Paty படுகொலை செய்யப்பட்டிருந்தார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இன்று ஒக்டோபர் 18 ஆம் திகதி நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் அவருக்கான அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
பொதுமக்கள், மாணவர்கள் என பலர் வீதிகளில் இறங்கி நடைபயணம் மேற்கொண்டு அஞ்சலி செலுத்தினர்.பரிஸ், லியோன், துலூஸ், மார்செய், போர்து, ஸ்ராஸ்பேக் என பல்வேறு நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். கொல்லப்பட்ட பேராசியருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், “நான் தான் சாமுவேல்”என பல பதாகைகளை பிடித்துக்கொண்டு வீதிகளில் நடை பயணம் மேற்கொண்டனர்.
பாரிஸ் நகரை உலுக்கிய பேராசியர் படுகொலை: ஆயிரக்கணக்கானோர் குவிந்து கண்ணீர் அஞ்சலி
Reviewed by Author
on
October 19, 2020
Rating:

No comments:
Post a Comment