திருகோணமலையில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று!
வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட பெண், கொழும்பில் இருந்து கந்தளாய்க்கு கடந்த மாதம் 26ஆம் திகதி சென்றதாகவும் பின்னர் 28ஆம் திகதி அவர் மீண்டும் கொழும்பிற்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கொழும்பில் வைத்தே கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த பெண், கந்தளாய் பகுதியில் தங்கியிருந்தபோது அவருடன் நெருங்கிப் பழகியவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதேச செயலாளர் குறிப்பிட்டார். மேலும், கந்தளாய் பிரதேசத்தில் அண்மைக்காலமாக கொரோனா தொடர்பாக முரணான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக தெரிவித்த அவர் ஊடகங்களின் ஊடாக உண்மையான தகவல்கள் சென்றடைய வேண்டும் என தெரிவித்தார்.
திருகோணமலையில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று!
Reviewed by Author
on
October 09, 2020
Rating:

No comments:
Post a Comment