மன்னார் புகையிரதத்தில் மோதுண்டு இறந்த நபரின் இறப்பில் சந்தேகம்
இந்த நிலையில் இன்றைய தினம் குறித்த நபர் மன்னார் எமில் நகர் பகுதியை சேர்ந்தவர் என கண்டறியப்பட்டுள்ளதுடன் குறித்த நபர் தனிமையில் வசிக்கும் வீட்டில் பல்வேறு சந்தேகத்தை ஏற்படுத்தக்கூடிய தடைய பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் குறித்த நபரை வழமை போன்று காலை கடற்தொழிலுக்கு அழைப்பதற்கு சக தொழிலாளர்கள் சென்ற பொழுது வீட்டில் அவர் இல்லாத நிலையில் அவர் உறங்கும் இடத்தில் இரத்தம் சிந்திய நிலையில் காணப்பட்டதை தொடர்ந்து குறித்த விடயம் மன்னார் பொலிஸாருக்கு தெரிவிக்கப்படதை தொடர்ந்து மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருகை தந்ததுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த நபர் கொலை செய்யப்பட்ட பின்னர் புகையிரதத்தின் மீது வீசப்பட்டார அல்லது வீட்டில் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளாரா இல்லை தற்கொலையா என்ற பல்வேறு கோணத்தில் போலிஸார் விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றனர்
மன்னார் புகையிரதத்தில் மோதுண்டு இறந்த நபரின் இறப்பில் சந்தேகம்
Reviewed by Author
on
October 09, 2020
Rating:

No comments:
Post a Comment