மன்னார் ஆயர் இல்லம் முழுமையாக முடக்கம்
குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,
மன்னார் பட்டித்தோட்டம் என்ற பகுதியில் கட்டிட பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களில் ஒருவர் காய்ச்சல் மற்றும் இருமல் காரணமாக கடந்த் புதன் கிழமை (7-10-2020) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்ற போது குறித்த நபருக்கு எழுந்த மானமாக பீ.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன் முடிவு நேற்று வியாழக்கிழமை இரவு கிடைக்கப் பெற்றது.
அதற்கமைவாக குறித்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெண்னப்புவ பகுதியை சேர்ந்த மன்னார் ஆயர் இல்ல பகுதியில் கட்டிட நிர்மான வேலையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவருக்கு கொரோன தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் குறித்த நபர் பணியாற்றிய மற்றும் நடமாடிய தொடர்புகளை பேணிய இடங்கள் மற்றும் நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக கட்டட நிர்மாண பணிகளை மேற்கொண்ட ஆயர் இல்லத்தில் கொரோன தொற்று அபாயம் காணப்படலாம் எனும் அச்சத்தில் முழு பகுதியும் முடக்கப்பட்டுள்ளதுடன் தனிமைபடுத்தல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் சம்மந்தப்பட்ட நபருடன் தொடர்பு பட்டவர்கள் மற்றும் கொரோனா அச்சம் என சந்தேகிக்கப்படுகின்ற பலருக்கு இன்றைய தினம் மேலதிக பீ.சி.ஆர் பரிசோதனைகள் இடம் பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.
மன்னார் ஆயர் இல்லம் முழுமையாக முடக்கம்
Reviewed by Author
on
October 09, 2020
Rating:

No comments:
Post a Comment