திவுலப்பிட்டி பகுதியில் பெண் ஒருவருக்கு கொரோனா - மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிப்பு
திவுலபிட்டியைச் சேர்ந்த 39 வயதுடைய பெண் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு கொழும்பில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் காய்ச்சல் காரணமாக கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதில் குறித்த பெண்ணுக்கு கோவிட் 19 இருப்பது கண்டறியப்பட்டது.
அதன்படி, கம்பஹா மருத்துவமனையின் சுமார் 15 ஊழியர்களும், அந்தப் பெண் பணிபுரிந்த தனியார் நிறுவனத்தின் ஊழியர்களில் சுமார் 40 பேரும் உறவினர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த பெண்ணுக்கு கொரோனா எவ்வாறு தொற்றியது என்பது குறித்து விசாரணைகள் நடந்து வருகின்றன.
இவருடன் நெருக்கமாக இருந்தவர்களின் பி.சி.ஆர் சோதனை முடிவுகளின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதன் காரணமாக, முறையான சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி விழிப்புடன் இருக்குமாறு அரசு தகவல் துறை பொதுமக்களுக்கு எச்சரித்துள்ளது.
திவுலப்பிட்டி பகுதியில் பெண் ஒருவருக்கு கொரோனா - மீண்டும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிப்பு
Reviewed by Author
on
October 04, 2020
Rating:

No comments:
Post a Comment