மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்பில் அவசர கலந்துரையாடல்.
இதன் போது பசில் ராஜபக்ஸ அவர்களினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைவாகவும் கடந்த வாரம் வடமாகாண ஆளுனர் அவர்களினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தல் மற்றும் கடந்த ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி பிரசுரம் போன்றவற்றை தெழிவு படுத்தி மக்களுக்கு ஒரு பாதுகாப்பான சூழ் நிலையை ஏற்படுத்தும் வகையில் குறித்த அவசர கலந்துரையாடல் இடம் பெற்றது.
-இதன் போது திருமண மண்டபங்களிலும், பொது இடங்களிலும் மக்களினுடைய ஒன்று கூடல்கள் பாதீப்பை ஏற்படுத்தக்கூடியதாக அமைந்துள்ளது.
-அதற்கு அமைவாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.
தீர்மானத்திற்கு அமைவாக மன்னார் மாவட்டத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி மண்டபங்கள் மற்றும் பொது மண்டபங்களில் ஒரே நேரத்தில் 50 க்கு மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு 50 க்கும் மேற்கொண்ட நபர்கள் ஒன்று கூடும் மண்டபங்கள் உடனடியாக மூடப்படும் என தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.
மேலும் நிகழ்வு ஒன்றை நடாத்துவதற்கு முன்னர் அந்த பிரதேசத்தில் இருக்கின்ற பொது சுகாதார பரிசோதகர்களிடம் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டும். அதே வேளை பிரதேசச் செயலகத்தின் அனுமதியும் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
குறித்த அனுமதிகளை பெற்றுக்கொள்ளும் பட்சத்தில் சுகாதார நடை முறைகளுக்கு அமைவாக நிகழ்வுகளை நடாத்த அனுமதி வழங்கப்படும்.என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் மன்னார் மாவட்டத்தில் உள்ள உணவகங்களில் ஏற்கனவே உள்ள ஆசனங்களில் அரை வாசி ஆசனங்களில் (மட்டுப்படுத்தப்பட்ட ஆசனங்களில்) மக்களை இருந்து உணவு சாப்பிட அனுமதிக்க வேண்டும் என்ற தீர்மானமும் எடுக்கப்பட்டுள்ளது.
-ஏற்கனவே அரசினால் அறிவிக்கப்பட்டமைக்கு அமைவாக வெளி மாவட்டங்களுக்கான போக்கு வரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. அரச உத்தியோகத்தர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் சென்று வருவதற்கான விசேட ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாக பதில் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 336 அரச உத்தியோகத்தர்கள் மன்னார் மாவட்டத்தில் கடமையாற்றி வருகின்றனர். அவர்களுக்கான போக்கு வரத்து வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்.
மேலும் மாவட்டத்தில் உள்ள வங்கிகளின் தன்னியக்க இயந்திரம் (ஏ.டி.எம்) உள்ள பகுதிகளில் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தலைமையில் இடம் குறித்த அவசர கலந்துரையாடலில் திணைக்கள தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் தமது கோரிக்கைகளையும்,அறிவுறுத்தல்களையும் முன் வைத்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்று தொடர்பில் அவசர கலந்துரையாடல்.
Reviewed by Author
on
November 03, 2020
Rating:
No comments:
Post a Comment