அண்மைய செய்திகள்

recent
-

மாந்தை மேற்கில் கிராம அலுவலகர் கொடூரக் கொலை- கொலையின் பின்னனியில் உள்ளவர்கள் உடன் கைது செய்யப்பட வேண்டும்.

மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும் இலுப்பைப் கடவை கிராம அலுவலகர் எஸ்.விஜியேந்திரன்(வயது-55) என்பவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு மனிதாபிமானத்திற்கு அப்பால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ள்ளார். 

 இவரது படு கொலை தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ் தேசிய்ககூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அமைச்சர் சமல் ராஜபக்ஸ அவர்களுக்கு இன்று வியாழக்கிழமை(5) அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். -குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடுகையில்,,, மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் கிராம அலுவலகர்களுக்கான பதில் நிர்வாக உத்தியோகத்தராக கடமையாற்றும் இலுப்பைப் கடவை கிராம அலுவலகர் எஸ்.விஜியேந்திரன் என்வரின் கொலையினை நான் வண்மையாக கண்டிக்கின்றேன்.

 இவ்வாறான கொடூரமான படு கொலைகள் தவிர்க்கப்பட வேண்டியவை. இவ்வாறான படுகொலைக் கலாச்சாரம் நமது மண்ணிலிருந்து கலைந்தெறியப்பட வேண்டும். இவ்வாறான கொலை அன்மைக் காலங்களில் மன்னார் மாவட்டத்தில் அதிகரித்து வருவதை நான் அவதானித்து வருக்கின்றேன். குறித்த சம்பவங்கள் சட்டம்,ஒழுங்கு சார் பிரச்சனையை தோற்றுவிப்பதோடு எமது பகுதியில் அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் என்பதனையும் தங்களது மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். மேலும் இந்த கொலையின் பின்னனியில் உள்ள நபர்கள் யார்? என்பதனை இனங்கண்டு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தன்டனையினை வழங்க வேண்டும்.என அவர் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மாந்தை மேற்கில் கிராம அலுவலகர் கொடூரக் கொலை- கொலையின் பின்னனியில் உள்ளவர்கள் உடன் கைது செய்யப்பட வேண்டும். Reviewed by Author on November 05, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.