மன்னார் தரவன் கோட்டை-கீரி பிரதான வீதியை கார்பட் வீதியாக புனரமைக்கும் வேளைத்திட்டம் ஆரம்பம்-45 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.
சுமார் 45 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 3 கிலோ மீற்றர் தூரம் கொண்ட குறித்த வீதி புனரமைப்பு செய்யப்பட்டு கார்பட் வீதியாக மாற்றப்படவுள்ளது.
குறித்த வீதி பணிகளை மன்னார் நகர சபை உறுப்பினர்களான செல்வக் குமரன் டிலான் ,பொலின்ரன்,சைமன் குலதுங்க ஆகியோர் இணைந்து வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தனர்.
இதன் போது குறித்த நிகழ்வில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் வட மாகாண பணிப்பாளர்,ஈ.பி.டி.பி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் எஸ்.சந்துரு, சமூர்த்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மன்னார் தரவன் கோட்டை-கீரி பிரதான வீதியை கார்பட் வீதியாக புனரமைக்கும் வேளைத்திட்டம் ஆரம்பம்-45 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு.
Reviewed by Author
on
November 29, 2020
Rating:

No comments:
Post a Comment