அண்மைய செய்திகள்

recent
-

தனக்குத் தானே தீ மூட்டிய மூன்று பிள்ளைகளின் தாய்! யாழில் துயரம்

தனக்கு தானே தீ மூட்டிய குடும்ப பெண்ணொருவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த பெண் நாவந்துறை பகுதியினை சேர்ந்த சுகாதரன் மேரிரெமினா(38) என்ற 3 பிள்ளைகளின் தாய் என பொலிஸார் கூறினர்.

 கணவருடன் இடம்பெற்ற தகராறு காரணமாக குறித்த பெண் கடந்த 17ஆம் திகதி தனக்குத் தானே தீ மூட்டியதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந் நிலையில் குறித்த பெண் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உயிரிழந்துள்ளார்.

 இறப்பு விசாரணைகளை வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமச்சிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தனக்குத் தானே தீ மூட்டிய மூன்று பிள்ளைகளின் தாய்! யாழில் துயரம் Reviewed by Author on November 21, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.