அண்மைய செய்திகள்

recent
-

யாழ். காரைநகரில் கொரோனா தொற்றாளர்: மருத்துவமனை உட்ப பல இடங்கள் முடக்கப்பட்டன!

சங்கானை நகரில் அமைந்துள்ள மீன் சந்தை மற்றும் மதுபானசாலை என்பன மறு அறிவித்தலை வரை மூடப்பட்டுள்ளன. அத்துடன், சங்கானை மீன் சந்தை வியாபாரிகள் 36 பேரும், சைக்கிள் கடை ஒன்றை சேர்ந்த 6 பேரும், மதுபானசாலையை சேர்ந்த 4 பேரும் என 46 பேரின் குடும்பங்கள் சுய சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் இந்த நடவடிக்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

 இதேபோல் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலை 3 நாள்களுக்கு மூடப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து காரைநகருக்கு திரும்பிய ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை நேற்று (27) உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் சென்று வந்த இடங்களில் தொடர்புடையவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்படுகின்றனர். 

கடந்த 21ம் திகதி வெள்ளவத்தையில் இருந்து காரைநகருக்கு திரும்பிய அவர், 3 நாட்களுக்கு மேலாக பல இடங்களில் நடமாடிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டு நேற்று தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு அவர் சென்றதால் வைத்தியசாலையை 3 நாட்களுக்கு மூடுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த வைத்தியசாலையின் சேவையாளர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டுள்ளனர். அந்த நபர் சங்கானை மீன் சந்தைக்குச் சென்றதால் அதனை மறு அறிவித்தல் வரை மூடுமாறும், மேலும் அவர் சைக்கிள் கடைக்குச் சென்ற நிலையில் சைக்கிள் கடையும், சங்கானை மதுபான சாலைக்குச் சென்றார் என்று கண்டறியப்பட்டதால் மதுபான சாலையும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.

யாழ். காரைநகரில் கொரோனா தொற்றாளர்: மருத்துவமனை உட்ப பல இடங்கள் முடக்கப்பட்டன! Reviewed by Author on November 28, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.