ஈரானின் சக்திவாய்ந்த அணு விஞ்ஞானி படுகொலை
நேற்று மதியம் தலைநகருக்கு அருகில் உள்ள அப்சார்ட் என்ற நகரில் அவர் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இதன் போது வரும் அவரது மெய்ப்பாதுகாவலரும் கொல்லப்பட்டுள்ளனர்.
அவரது காரை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், குண்டுவெடிப்புச் சத்தமும் துப்பாக்கி பிரயோகமும் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆயுதமேந்திய பயங்கரவாதிகளே இத்தாக்குதலை மேற்கொண்டனர் என தெரிவித்துள்ள ஈரானின் பாதுகாப்பு அமைச்சு, பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளிற்கும் இடையிலான மோதலின் போது மொஹ்சென் பக்ரிசாதே காயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் அவரை காப்பாற்றுவதற்கான மருத்துவ குழுவின் முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பயங்கரவாதிகள் காரின் மீது குண்டுதாக்குதலை மேற்கொண்ட பின்னர் துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரானின் சக்திவாய்ந்த அணு விஞ்ஞானி படுகொலை
Reviewed by Author
on
November 28, 2020
Rating:

No comments:
Post a Comment