பீ சீ ஆர் பரிசோதனை அறிக்கை மற்றும் வாகன தொற்று நீக்கிய சான்றிதல் இருந்தால் மாத்திரமே மன்னார் மாவட்டத்துக்குள் நுழைய அனுமதி
கொரோனா தொற்று பரவல் தொடர்பான அவசர மீளாய்வு கூட்டமானது மன்னார் மாவட்ட செயலகத்தில் மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் குணபாலன் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தர்மராஜ் வினோதன் மன்னார் மாவட்ட பிரதேச செயலாளர்கள் திணைக்கள தலைவர்கள் முப்படை பிரதிநிதிகள் பலரது பங்கு பற்றுதலுடன்
வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புகுழு தலைவருமான காதர் மஸ்தான் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் இடம் பெற்றது.
குறித்த கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது
அதே நேரத்தில்
கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்டுள்ள மாவட்டங்களுக்கிடையிலான பொது போக்குவரத்து சேவை தொடர்பாகவும் அவற்றை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பாகவும் அத்தியாவசிய பொருட்களுக்கான தேவைகள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது
அத்துடன் திருமண நிகழ்வுகள் வைபவங்கள் போன்ற மக்கள் ஒன்று கூடும் இடங்களில் மேற்கொள்ளப்பட்டவேண்டிய சுகாதார நடைமுறைகள் தொடர்பாகவும் மதுபாண சாலைகள் மற்றும் அதிஸ்ரலாப சீட்டுக்கள் விற்பனை செய்யும் இடங்களில் நடைமுறைப்படுத்தப்படவேண்டிய நடைமுறைகள் தொடர்பாகவும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
பீ சீ ஆர் பரிசோதனை அறிக்கை மற்றும் வாகன தொற்று நீக்கிய சான்றிதல் இருந்தால் மாத்திரமே மன்னார் மாவட்டத்துக்குள் நுழைய அனுமதி
Reviewed by Author
on
November 10, 2020
Rating:
Reviewed by Author
on
November 10, 2020
Rating:




No comments:
Post a Comment