அண்மைய செய்திகள்

recent
-

ரிஷாட் பதியுதீனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் உத்தரவு!

அரச நிதியை முறைகேடாக செலவிட்டமை மற்றும் தேர்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் 19 ஆம் திகதி குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்ட அவரை இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியபோதே எதிர்வரும் 13 வரை விளக்கமறியல் வைக்க உத்தரவிடப்பட்டது.

 கடந்த ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு தினத்தில், புத்தளம் பகுதியிலுள்ள இடம்பெயர்ந்த மக்களை, அரச பேருந்துகள் ஊடாக மன்னார் பகுதிக்கு அழைத்து சென்று வாக்களிக்க வைத்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரச பேருந்துகளில் மக்களை அழைத்து சென்றதன் ஊடாக, பொது சொத்துக்களை முறைகேடாக பயன்படுத்தியமை, அரச நிதியை முறைகேடாக செலவிட்டமை மற்றும் தேர்தல் சட்டத்தை மீறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் கீழ் ரிஷாட் பதியூதீன் உள்ளிட்ட மூவரை கைது செய்யுமாறு சட்ட மா அதிபர் பொலிஸாருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

 இதையடுத்து, 6 பொலிஸ் குழுக்கள் ரிஷாட் பதியூதீனை கைது செய்வதற்காக மன்னார், கிழக்கு மாகாணத்தில் உறவினர் வீடுகளிலும் மற்றும் கொழும்பில் உள்ள அவரது வீடுகளிலும் சோதனைகளை நடத்தியிருந்தது. எனினும், ரிஷாட் பதியூதீன் தலைமறைவாகி இருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிஷாட் பதியூதீன் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் ஒக்டோபர் 19 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

.
ரிஷாட் பதியுதீனுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல் உத்தரவு! Reviewed by Author on November 10, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.