அண்மைய செய்திகள்

recent
-

தீபாவளி கொண்டாடத்தின் போது கடைபிடிக்க வேண்டிய சுகாதார விதிமுறைகள்

தீபாவளி பண்டிகை கொண்டாடத்தின் போது கடைபிடிக்க வேண்டிய சுகாதார விதிமுறைகள் தொடர்பாக இந்து மத தலைவர்கள் மற்றும் சமூகத் தலைவர்களை அறிவூட்டுவதற்கான சுகாதார அமைச்சின் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

 இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டங்கள் தோட்டப்புற சமூகம் மற்றும் இந்து மத சமூகத்திற்கிடையே கொவிட் - 19 வைரஸ் பரவுவதை தடுப்பது தொடர்பாக அதிக அவதானம் செலுத்தி அந்த பண்டிகை கொண்டாட வேண்டிய வழிமுறைகள் குறித்து இந்து மத தலைவர்களுக்கும் சமூகத் தலைவர்கள் உட்பட இந்து மத மக்களுக்கும் சுகாதார அமைச்சினால் ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும்; வழங்குகிறது.

 அதன்படி, நாட்டில் தற்போது கொவிட் - 19 பரவும் சூழ்நிலையில் நவம்பர் 14 அன்று கொண்டாடப்படவுள்ள தீபாவளியை பின்வரும் சுகாதார நடைமுறைகளையும் ஆலோசனைகளையும் பின்பற்றி கொண்டாமாறு சுகாதார அமைச்சு இந்து மத சமூகத்திடம் கேட்டுக்கொள்கிறது.

 • தீபாவளி பண்டிகையின் போது நல்ல மனநிலையை பேணுவதற்கும், பண்டிகை கொண்டாடத்தின் போது எந்தவொரு இந்து மக்களும்; வைரஸ் தொற்றுக்கு ஆலாகாமல் இருத்தல் வேண்டும்.

 • மக்கள் ஒன்றுகூடாமல் தற்போதுள்ள இடங்களிலேயே தீபாளியை கொண்டாடுங்கள். கொழும்பு, கம்பஹா, களுத்துறை போன்ற அதி அவதானத்திற்குரிய பிரதேசங்களில் இருந்து உங்கள் ஊரில் உங்களின் அன்புக்குரியவர்களுக்கு நோய் பரவுவதை தடுத்தல் வேண்டும்.

 • தூர பயணங்களை தவிர்த்து வீடுகளிலேயே தீபாவளியை கொண்டாட வேண்டும்.

 • குடும்ப உறுப்பினர்களுக்கு, நண்பர்களுக்கு மற்றும் உறவினர்களுக்கு தொலைபேசியில் வாழ்த்துக்களை தெரிவிக்கவும்.

 • கோயில்களில், சமூகத்தில் அல்லது தோட்டப்புறங்களில் மத கொண்டாட்டங்கள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

 • உடனே தீப்பற்றக்கூடிய சிறிதளவு அற்ககோல் அடங்கிய கை கழுவும் திரவங்களை பயன்படுத்திவிட்டு ஒளி விளக்குகளை ஓளிரச்செய்வதை தவிர்க்கவும். மத செயற்பாடுகளுக்கு முன்னரும் பின்னரும் சவர்க்காரமிட்டு கைகளை கழுவவும்.

 • கைகுலுக்கி வாழ்த்து தெரிவிப்பதை தவிர்த்து ´ஆயுபோவன்/வணக்கம்´ கூறி அல்லது வேறு வழியில் வாழ்த்துவது பொருத்தமானதாகும்.

 • இந்த பண்டிகையின் போது மதுபானம் மற்றும் புகையிலை பாவிப்பதை தவிர்க்கவும்.

 இந்த தீபாவளி பண்டிகையின் போது சுகாதார அறிவுறுத்தல்களை பின்பற்றி கோவிட் - 19 பரவுவதை தடுப்பதற்கு உதவுமாறும், பொறுப்புடன் பாதுகாப்பாக செயற்பட்டு இந்த தீபாவளி பண்டிகையை ஒரு புது வழிமுறையில் கொண்டாடுவோம்! என சுகாதார அமைச்சு கூறுகிறது

தீபாவளி கொண்டாடத்தின் போது கடைபிடிக்க வேண்டிய சுகாதார விதிமுறைகள் Reviewed by Author on November 12, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.