அண்மைய செய்திகள்

recent
-

ஒஸ்ரியத் தலைநகர் வியன்னாவில் ஆயுததாரிகள் – பொலீஸார் மோதல்!

ஒஸ்ரியாவின் தலைநகர் வியன்னாவில் யூத மத வழிபாட்டுத்தலம் ஒன்றின் அருகே மர்ம ஆயுததாரிகளுக்கும் பொலீசாருக்குமிடையே துப்பாக்கிச் சண்டை இடம்பெற்றுள்ளது. இந்தச் சண்டையில் பலர் காயமடைந்துள்ளதோடு, பொலீஸ் தரப்பில் ஒருவரும் ஆயுததாரி ஒருவரும் உயிரிழந்தனர் என்று முதலில் வெளியான தகவல்கள் தெரிவித்தன.

 நகரில் இரவு 8 மணி முதல் ஒன்றுக்கு மேற்பட்ட ஆயததாரிகளுடன் பொலீஸார் துப்பாக்கிச் சண்டையில் ஈடுபட்டுள்ளனர் என்றும் நகரில் ஆறு இடங்களை ஆயுதபாணிகள் இலக்கு வைத்து தாக்கியுள்ளனர் என்றும் பொலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. கறுப்பு உடை அணிந்த மர்ம நபர் ஒருவர் இயந்திரத் துப்பாக்கியுடன் ஓடுகின்ற காணொளிக் காட்சிகள் வெளியாகி உள்ளன. 

 ஒஸ்ரிய உள்துறை அமைச்சர் இதனை “ஒரு பயங்கரவாதத் தாக்குதல்” என்று தெரிவித்திருக்கிறார். தப்பி ஓடிய ஆயுததாரி ஒருவரைத் தேடிப்பிடிப்பதற்காக வியன்னா நகரப் பகுதி முற்றுகையிடப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. நகரின் மையப்பகுதியில் உள்ள central Schwedenplatz சதுக்கத்தில் இந்த தாக்குதல் நடந்திருக்கிறது. 

துப்பாக்கிக் குண்டுச் சத்தங்களால் பீதியடைந்த பலரும் பதறியடித்து ஓடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளன. தாக்குதல் நடந்த சமயம் நகரின் மையப் பகுதியில் உள்ள யூத வழிபாட்டுத்தலம் (synagogue) மூடப்பட்டிருந்ததாக வியன்னாவில் வசிக்கும் இஸ்ரேலிய சமூகத்தினர் தெரிவித்திருக்கின்றனர். ‘பிரெஞ்சு மக்கள் தங்களது நட்பு நாடான ஒஸ்ரிய மக்களோடு அதிர்ச்சியையும் துயரத்தையும் பகிர்ந்து கொள்கின்றனர்’ என்று பிரான்ஸ் அதிபர் மக்ரோன் தனது டுவிற்றர் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஒஸ்ரியத் தலைநகர் வியன்னாவில் ஆயுததாரிகள் – பொலீஸார் மோதல்! Reviewed by Author on November 03, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.